பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வாயில் கருப்புத் துணி கட்டி எதிர்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்தனர்.


திருப்பூர்: தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வாயில் கருப்புத் துணி கட்டி பங்கேற்று பின்னர் வெளிநடப்பு செய்தனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மனீஷ் நாரணவரே தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.



கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக குற்றம்சாட்டினர். ரூ.50,000 வரை மட்டுமே முழு தள்ளுபடியும், ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளு

செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அந்த வாக்குறுதிக்கு முரணானதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பயிர் கடன் மட்டுமின்றி, நகைக் கடன், டிராக்டர் கடன் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாயில் கருப்புத் துணி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்த விவசாயிகள் பின்னர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...