கோவை : ரேஸ்கோர்ஸ் பகுதியில் 13 ஆண்டுகள் பழமையான சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு அருகே இருந்த விலையுயர்ந்த சந்தன மரம் ஏற்கனவே வெட்டப்பட்டு கடத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மர்மநபர்களால் சர்வ சாதாரணமாக மேற்கொள்ளப்பட்ட இந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் 13 ஆண்டுகள் பழமையான மேலும் ஒரு சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தியுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.

இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த கே. சையத் கூறுகையில், "ரேஸ்கோர்ஸ் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாததே, சந்தன மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு, திருடப்படுவதற்கு காரணமாகும். ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் நிறைந்த முக்கிய பகுதியாகும். இந்தப் பகுதிகளிலேயே இது போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருவதால், பிற பகுதிகளில் சமூக சட்ட விரோத நடவடிக்கைகள் எளிதில் நிகழும்," என்றார்.

இதனிடையே, சந்தன மரம் வெட்டி, திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.