சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில் படித்து பிளஸ்-2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில் படித்து பிளஸ்-2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சி.பி.எஸ்.இ பாடப்பிரிவில் சுமார் 28 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியுள்ளனர். இதில் 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் மட்டும், 12 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 4,138 மையங்களில் இந்தத் தேர்வுகள் நடந்து முடிந்தன. வினாத்தாள் வெளியானதால், பொருளாதாரவியல் தேர்வு மீண்டும் நடந்தது.

இதையடுத்து சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.results.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 83.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.31 சதவீத மாணவிகளும், 78.99 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்ஸவா என்பவர் 499 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

முதல் 3 இடங்களைப் பிடித்த மண்டலங்கள்:- 

திருவனந்தபுரம் மண்டலம் - 97.32%

சென்னை மண்டலம் - 93.87%

டெல்லி மண்டலம் - 89%

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...