கோவையில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை : ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை கோவையில் இன்று நடைபெற்றது. 



கோவையைச் சேர்ந்த கோப்ரா பிரதீப் குமார் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓசூர் சாலையில் உள்ள ஆர்தரா அரங்கில் இன்று நடைபெற்றது. இது குறித்து பிரதீப்குமார் கூறுகையில், " ரஜினி ரசிகன் என்ற அடிப்படையில் இந்த முகாமை தானாக முன்வந்து நடத்தி வருகிறேன். 

கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரஜினி மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை செய்து வரும் சேம் ஆண்ட்ரூஸ் என்பவரும் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளார். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்பவர்களின் பெயர், வயது, ஊரின் விபரம், மன்றத்தில் இணைவதற்கான காரணம், ஏற்கனவே வேறெதுவும் கட்சியில் உள்ள விபரம் என பல்வேறு தகவல்கள் கேட்டுள்ள உறுப்பினர் படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. 

மேலும், உறுப்பினர் சேர்க்கை மூலம் இணைந்துள்ள படிவங்கள் ரஜினியிடம் கொண்டு செல்லப்படும். இணையத்தளம் மூலமாகவும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினராகலாம்." என்றார்.  

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...