பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


கோவை: வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டுமே மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி, பொது இடங்களில் கால்நடைகளை வதை செய்வது சட்டவிரோதம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை, கோவையின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களிலும் விதிகளை மீறி மாடுகள் வெட்டப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்தாண்டு பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது, தற்காலிக செட்கள் அமைக்கக்கூடாது, அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டும் காளை மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கோவை மாவட்ட ஆட்சியாளர், காவல் ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் செல்வபுரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் வரும் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து வழக்கு மீண்டும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...