தமிழகம் முழுவதும் ஒரே மென்பொருள் வாயிலாக பிறப்பு, இறப்பு பதிவு

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை தமிழகம் முழுவதும் ஒரே மென்பொருள் வாயிலாகப் பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை : பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை தமிழகம் முழுவதும் ஒரே மென்பொருள் வாயிலாகப் பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (பிப்.,15) பிறப்பு, இறப்பு பதிவுகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர் தெரிவிக்கையில்:- தமிழகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் மூலம் பதிவு செய்து சான்றிதழ்கள் வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. பிறப்பு, இறப்பு பதிவுகள் வேறு வேறு மென்பொருளில் பதிவு செய்து சான்றுகள் வழங்கப்படுவதைத் தவிர்த்து, அவற்றினை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு, தற்போது தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஒரே மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் ஒரே மென்பொருளினால் பிறப்புகள் பதிவு செய்யப்படுவதால், எளிமையான முறையில் பதிவுகளை பராமரிக்கவும், பிறப்பு சான்றிதழ்கள் பெறவும் இயலும். பிறப்பு பதிவு செய்ய கர்ப்பிணி பெண்கள் பதிவு சம்பந்தப்பட்ட கிராம அல்லது நகர சுகாதார நிலையத்தினை அணுகிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யும் போது 12 இலக்க அடையாள எண் வழங்கப்படுகிறது. இந்த 12 இலக்க அடையாள எண் இருந்தால்தான் இனி வரும் காலங்களில் பிறப்பு சான்று பெற இயலும்.

இது தொடர்பாக பிறப்பு, இறப்பு பதிவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கூடிய நடைமுறைகளின்படி மட்டுமே பிறப்பு, இறப்பு பதிவாளருக்கு பிறப்பு விபரம் அனுப்பப்பட வேண்டும். மென்பொருளில் விபரங்கள் பதிவு செய்தபின் தேவையான சான்றுகளை பொதுமக்கள் ஆன்-லைன் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். அனைத்து அரசு மருத்துமனைகளிலும் அங்கங்கு நிகழும் பிறப்பிற்கு பிறப்பு சான்று உடனடியாக வழங்கப்படும். எனவே, இப்புதிய நடைமுறைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார். 

இக்கூட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிசந்திரன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர். பி.ஜி. பானுமதி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...