பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வேறு இடங்களில் தூய்மை பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் பல்வேறு பொதுப்பணிகள் மற்றும் தூய்மை பணிகளை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பீளமேடு கிரி அம்மன் கோயில் வீதி பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகும் பிரச்சனை எழுந்திருந்தது. இதை சரி செய்யும் பணி இன்று நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பணி நடப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை முடித்த பிறகு காங்கிரீட் தளம் அமைக்குமாறும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைந்து முடித்திடவும் சூயஸ் சூப்பர்வைசரிடம் கூறினார்.



பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை தபால் நிலையம் முன்பகுதியில் மாஸ் கிளீனிங் பணி இன்று நடைபெற்றது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரத்தில் குப்பைகள், மண்கள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் வலியுறுத்தினார். இதில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.

பீளமேடு பிஆர்பி கார்டன் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார்.



பீளமேடு சூர்யா கார்டன் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யும் பணியும் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் தினசரி சரியாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் வலியுறுத்தினார்.

வார்டு எண் 27 பீளமேடு பகுதி மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க கவுன்சிலர் அம்பிகா தனபால் தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...