உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்த 1,10,008 சிவலிங்க சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.  



தாராபுரம் வாசவி மஹாலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி பெண்கள் அரிசிமாவு ,சந்தனம் ஆகியவற்றை கொண்டு மூன்று மாதங்களாக தயாரித்த 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவராத்திரி அன்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தால்  புண்ணியம் உண்டாகும் என முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில், அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை தரிசனம் செய்தனர். அனைத்து நலங்களையும் பெறவேண்டும் என்பதற்காக நடத்தபட்ட இந்த வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர்.

மேலும், 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை கொண்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கத்தின் தோற்றத்தை வோர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் பார்வையிட்டனர். இதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அதற்கான விருதினை சிவலிங்கங்கள் செய்த பெண்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். உலக சாதனை பெற்ற சிவலிங்கத்தை காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...