சாகுல் ஹமீது மரணம் தொடர்பாக காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொன் சந்திரன்

மேட்டுப்பாளையத்தில் போலீசார் விசாரணையின் போது சாகுல் ஹமீது என்பவர் உயிர்ழன்தது தொடர்பாக அக்காவல்நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.யு.சி.எல்.மாநில இணை செயலாளர் பொன் சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் போலீசார் விசாரணையின் போது சாகுல் ஹமீது என்பவர் உயிர்ழன்தது தொடர்பாக அக்காவல்நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.யு.சி.எல்.மாநில இணை செயலாளர் பொன் சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் போலீசார் கஸ்டடியில் இருந்த சாகுல் ஹமீது என்பவர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் பி.யு.சி.எல்.மாநில இணை செயலாளர் பொன் சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " சாகுல் சமீது மரணம்  தொடர்பாக உதவி ஆய்வாளர் பொன்ராஜ், காவல் நிலைய அதிகாரிகள் மீது பணி இடைநீக்கம் உட்பட துறை சார்ந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சாகுல் அமீது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சாகுல் அமீதின் காவல் நிலைய இறப்பு வழக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176 (1A) ன் கீழ் தனி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் தான் சாகுல் அமீது உயிரிழப்பு நடந்ததாக காவல்துறை வழக்கை ஜோடிக்கிறது. அதற்காக பொதுமக்களை மிரட்டுவது, பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பேரம் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடுகிறது.

இதுதொடர்பாக தற்போது நடைபெற்று வரும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் விசாரணை நம்பிக்கை அளிக்கிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த வழக்கை தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும். உதவி ஆய்வாளர் பொன்ராஜின் முந்தைய  செயல்பாடுகள் மதரீதியாகவும் இருப்பதாகச் சந்தேகம் எழுகிறது."இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...