தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு : தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது.

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்று திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு, இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக்கூடாது என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தன. படத்திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தன.

இந்த நிலையில், ஜெயலலிதா படத்திறப்பு விழா சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். விழாவில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விழாவில் பங்கேற்கவில்லை. படத்திறப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் விழாவிற்கு வரவில்லை. சட்டப்பேரவையில் காந்தி, பெரியார், அண்ணா உள்ளிட்ட 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 11-வது தலைவராக ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் இடம்பெறும் முதல் பெண் தலைவர் படம் இது ஆகும். 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட இந்தப் படத்தை கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதலமைச்சர் மதியழகன் வரைந்துள்ளார். பச்சை நிற சேலையுடன் ஜெயலலிதா நிற்பது போன்று வரையப்பட்டுள்ள இந்தப் படத்தில், ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என எழுதப்பட்டுள்ளது.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...