உடுமலையில் இந்திய அளவிலான கராத்தே போட்டிகள்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. 

நேற்று தொடங்கிய இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்தும் வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 



வயது மற்றும் எடை ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. கத்தா மற்றும் குமிட்டே பிரிவில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை வென்ற வீரர்களுக்குச் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. 

மாணவர்களிடையே தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...