பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - கேரளா நிதியமைச்சர்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

திருப்பூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய ஜி.எஸ்.டி குழு உறுப்பினரும் , கேரள நிதியமைச்சருமான தாமஸ் ஐசக் திருப்பூர் வந்துள்ளார். இதனையொட்டி திருப்பூரில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டம் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "திருப்பூர் போன்றே சூரத், லூதியானா போன்ற பின்னலாடை நகரங்களும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. 

பாதிப்படைந்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள தாராள பொருளாதார கொள்கையால் வெளிநாட்டினர் எளிதாக இந்தியாவில் தொழில்துவங்க வசதியாகும். அதனை இந்திய தொழில் நிறுவனங்கள் இணைந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில் துறையினர் ஜி,எஸ்.டி வரிவிதிப்பில் பின்னலாடைத் துறையினருக்கான சலுகைகளைப் பரிந்துரைக்க வேண்டும்." என்றனர்.



Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...