கோவையில் சாலையை மறித்து கட்டப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் நிகழும் விபத்துகள்

கோவையில் இருவழிப் பாதையை மறித்துக் கட்டப்பட்ட பேனரால் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்துக்குள்ளாகியிருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் இருவழிப் பாதையை மறித்துக் கட்டப்பட்ட பேனரால் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்துக்குள்ளாகியிருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை - சத்தியமங்கல் சாலையில் உள்ள சரவணம்பட்டி என்ற பகுதியில் காப்பிக்கடை என்னும் இடம் உள்ளது. அங்கு, ஆளுங்கட்சியினர் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 



கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர்கள் வைக்கப்படுவதே சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவழிச்சாலையை மறித்து அந்தப் பேனர் கட்டப்பட்டிருந்தது. இதனால், வாகனங்கள் ஒருவழிப் பாதையை மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது டெம்போ பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கிலும் அரசின் சார்பில் இருவழிச்சாலைகள் அமைக்கப்படும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இதுபோன்று சாலைகளை மறித்து இடையூறு ஏற்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...