முன்னாள் துணைவேந்தர் கணபதியின் உதவியாளர் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் உதவியாளர் சுல்தான் பேகத்தின் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை: பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் உதவியாளர் சுல்தான் பேகத்தின் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

பேராசிரியர் நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாக சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு. அவர் பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முயன்றதாக அவரது மனைவி சொர்ணலதாவும், அவரது உறவினரும், பல்கலைக்கழக ஊழியருமான மதிவாணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ்ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச புகாரில் தொடர்பிருக்கும் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் அறைகளில் நேற்று 7-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் கணபதியின் உதவியாளர் சுல்தான் பேகத்தின் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையையொட்டி, அங்கு போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, 8-வது நாளாக பாரதியார் பல்கலைக்கழகம் சோதனைக்குட்படுத்தப்படுவதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...