நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. இதனை அந்த தனியார் விடுதி நிர்வாகம் மூடாமல் இருந்ததால் அப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டெருமை அந்த கிணற்றில் தவறி விழந்துள்ளது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வன அதிகாரி கணேசன் தலைமையில் கிணற்றில் விழந்த காட்டெருமையை காப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அந்த காட்டெருமை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அதிகளவு நடைபெறுவதற்கு தனியார் விடுதிகள், அரசின் அனுமதி பெறாமல் இது போன்ற ஆழ்துளை கிணறுகள் வெட்டுதல், பாறைகள் உடைத்தல் போன்ற சட்ட விரேத செயல்களில் ஈடுபடுவதே காரணம் என்றும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.