திருப்பதியில் இனி ஆண்டுக்கு ஒருவர் இருமுறை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி ?

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறநிலைத்துறை அமைச்சர் மாணியக்லாயராவ் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறநிலைத்துறை அமைச்சர் மாணியக்லாயராவ் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆந்திர அமைச்சர் கூறுகையில், நாள்தோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பக்தர்கள் நிற்காமல் சென்றால் அரை மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யக்கூடிய நிலை உள்ளது. மேலும், ஒருவரே பலமுறை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தால் சுவாமி தரிசனம் செய்து வைக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். 

எனவே, ஆதார் அட்டை மூலம் இணைத்து முதல் முறை வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, பின்னர் வாய்ப்பு இருந்தால் கூடுதல் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மேலும் பல பக்தர்கள் பயனடைவார்கள். இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். இவ்வாறு கூறினார். 

அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்ட நெரிசலை சமாளிக்க வழியை தேடுவதை விட்டு விட்டு, பக்தர்கள் இத்தனை முறை தான் கடவுளை தரிசிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்றும், ஆனால் விஐபி தரிசனம் என்ற பெயரில் விஐபி பிரேக் விடப்படுகிறது, இந்த சமயத்தில் 10,000 சாதாரண பக்தர்கள் தரிசிக்கலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...