இந்திய மருத்துவ கவுன்சில் விவகாரம் : போராட்டத்தை வாபஸ் பெற்றனர் மருத்துவர்கள்

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் மருத்துவர்கள்.

கோவை, ஜனவரி 2

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் மருத்துவர்கள்.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.இதற்கு நாடு முழுவதும் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சையானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி அவசர சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டது.

கோவையில் மட்டும் இன்று 5000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை கோவை அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு  செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் , மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு இன்று அறிவித்ததை தொடர்ந்து மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

அகில இந்திய மருத்துவ சங்கம் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...