‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பயணிகள் சேவை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை: விமான நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும், விமானப் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் ‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இன்று காலை முதல் விமான நிலையதிற்கு வந்த பயணிகளுக்கு திலகம் வைத்து வரவேற்பளிப்பதன் மூலம் தொடங்கிய விழா, அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மாணவிகளின் பாரம்பரிய படுகர் நடன நிகழ்ச்சி என களைகட்டியது.



தொடர்ந்து, இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து “வந்தே மாதரம்” பாடலைப் பாடி தேசப்பற்று மற்றும் பொது சேவைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.



பயணிகள் மற்றும் பார்வையாளர்களை கொண்டாட்டங்களில் ஈடுபடுத்தும் வகையில், விமான நிலைய முக்கிய பகுதிகளில் செல்ஃபி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.

அதேவேளையில், விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரி மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் அமர்வையும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நடத்தினர்.

சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.



மேலும், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட பொது சுகாதார பரிசோதனை முகாமில், விமான நிலைய ஊழியர்கள், பங்குதாரர் நிறுவன ஊழியர்கள், பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட சுமார் 184 பேர் பயனடைந்தனர்.

அதேபோல், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட கண் பரிசோதனை முகாமில், விமான நிலைய டாக்ஸி ஓட்டுநர்கள், விமான நிலைய ஊழியர்கள், பங்குதாரர் நிறுவன பணியாளர்கள், பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட சுமார் 112 பேருக்கு கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



விமான நிலைய வளாகத்தில் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கமும் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், “ஏக் பேட் மா கே நாம்” மரக்கன்றுகள் நடும் இயக்கமும் நடத்தப்பட்டு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்கள், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை பாராட்டும் வகையில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி, பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துதல், சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவித்தல், இளைஞர்களுக்கு எதிர்கால வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல், முன்களப் பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரித்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் விமான நிலைய சமூகத்தின் கூட்டு முயற்சியை பிரதிபலிப்பதாக அமைந்தது.



இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் அப்துல் ஆரிப் கூறுகையில், பயணிகள், பங்குதாரர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணக்கமான உறவை வலுப்படுத்துவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் கொண்ட விமானப் போக்குவரத்துத் துறையை உருவாக்க இந்திய விமான நிலைய ஆணையம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...