கோவை, டிசம்பர்.26:
சசிக்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முபாரக் கைது செய்யப்பட்டுள்ளர்.
இந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட செய்தித்தொடர்பாளராக இருந்த சசிகுமார் (35) 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ம் தேதி கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதை தொடர்ந்து சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சதாம் (27), அபுதாகிர் (27) மற்றும் ஜி.எம் நகரை சேர்ந்த சுபைர் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் அபுதாகிர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட முபாரக் (28) தலைமறைவாக இருந்தார்.
அவர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், முபாரக் பொள்ளாச்சியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் முபாரக்-ஐ கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.