சசிகுமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முபாரக் கைது

கோவை, டிசம்பர்.26: 

சசிக்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த   முபாரக் கைது செய்யப்பட்டுள்ளர். 

இந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட செய்தித்தொடர்பாளராக இருந்த சசிகுமார் (35)   2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ம் தேதி கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

இதை தொடர்ந்து சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சதாம் (27), அபுதாகிர் (27) மற்றும்  ஜி.எம் நகரை சேர்ந்த சுபைர் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இதில் அபுதாகிர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட  முபாரக் (28) தலைமறைவாக இருந்தார். 

அவர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், முபாரக் பொள்ளாச்சியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

 அங்கு சென்ற போலீசார் முபாரக்-ஐ கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...