கோவை, டிசம்பர் 15
நேரு கல்வி குழுமம் சார்பில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நேரு கல்வி நிறுவனத்தின் நிறுவனர் பி.கே. தாஸின் நினைவையொட்டி அவரது பிறந்த நாளன்று (டிச.,15), சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சிறந்த ஆசிரியருக்கான விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பி.கே. தாஸ் நினைவு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை 10 ஆசிரியர்கள் பெற்றனர். மேலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் கே. போர்ஷெஷியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கொல்கத்தாவைச் சேர்ந்த சமஸ்கிருதம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பவ்லா பானர்ஜி கலந்து கொண்டார்.