கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போத்தனூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Coimbatore: கோவை வெள்ளலூர் Housing Unit பகுதியை சேர்ந்த சந்தோஷ் (29) கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை போத்தனூர் கருப்பராயன் கோயில் அருகே உள்ள கிரீன் பார்க் பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.




அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அவசரமாக கொண்டு சென்றனர்.




அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பரிசோதித்த மருத்துவ உதவியாளர் சந்தோஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.




இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்த திடீர் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...