கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்கு தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளார். கோடைகாலத்தில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




குறிப்பாக தற்போதைய கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி சீரான இடைவேளையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளும் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.




பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் தொடர்பான குறைகள் இருப்பின், வாட்ஸ் அப் எண் 819000 00200 மற்றும் கிழக்கு மண்டலம் (East Zone): 89258 40945, மேற்கு மண்டலம் (West Zone): 89259 75981, வடக்கு மண்டலம் (North Zone): 89259 75980, தெற்கு மண்டலம் (South Zone): 90430 66114, மற்றும் மத்திய மண்டலம் (Central Zone): 89259 75982 ஆகிய எண்களில் குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்துக் கொள்ளலாம்.




குடிநீர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...