வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி

கோவை, நவம்பர் 27

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் இளைஞர்களுக்காக திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களால் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களது வேலை பெறும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் நவம்பர் 29ம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி அளிக்கும் பல நிறுவனங்கள் பங்கேற்று பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். 

முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், சிறந்த தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் பயிற்சி பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...