கார்ப்பரேட் நிறுவன ஆட்டோக்களுக்கு கட்டண கட்டுப்பாடு விதிக்காததை கண்டித்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் மனு


கோவை, நவம்பர் 27

அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் வருகின்ற 2018 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் மினிமம் ரூபாய் 30 கி.மீ 15 ரூபாய் கட்டணத்தை மீட்டர் கட்டண அட்டையை காட்டி வசூல் செய்வது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து துணை ஆணையர் பத்திரிக்கையில் கொடுத்த அறிக்கையின்படி தன்னிச்சையாக கட்டணம் முடிவு செய்து அறிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 



அரசு கட்டணம் நிர்ணயம் செய்யாமல், மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோ டிரைவர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் ஆணையாளரின் நடவடிக்கை நியாயமானதல்ல என தெரிவித்தனர்.

மேலும், கார்ப்பரேட் கம்பெனிகளான ஓலா,ஜீகுனு போன்றவை தன்னிச்சையாக முடிவு எடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்ட வசூலிக்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஆதாயம் பெருவதால்தான் துணை ஆணயாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றம் சாட்டினர். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு அமுல்படுத்தவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிக கட்டண வசூலை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.



Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...