உயர்கல்விக்கான விருது பெற விண்ணப்பிக்க நாளைக் கடைசிநாள்

கோவை, நவம்பர் 14 

தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகம் சார்பில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளைக் கடைசி நாளாகும். 

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகத்தின் சார்பில் விருது வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. உயர்கல்வியில் பெரும் பங்களிப்பை அளித்தவர்கள், சிறந்து விளங்கியவர்கள், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த தலைமையாசிரியர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

வரும் 25-ம் தேதி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஐடிசி வெல்கம் ஓட்டலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படுகின்றது. தகுதியானவர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்க நாளைக் கடைசி நாளாகும். 

இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாநில அளவிலான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படுகிறது. இதில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 22-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...