ஆபத்தாக மாறி வரும் சுரங்கச் சாலைகள்

கோவை, அக்டோபர் 31: ரயில்கள் செல்லும் தண்டவாளப் பாலங்களின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகள் முறையாக பராமரிக்கப் படாததால் வாகன ஓட்டிகளுக்கு அவை பெரும் ஆபத்தாக மாறிவருகின்றன. குறிப்பாக, மழைக் காலங்களில் இந்த பாலங்களுக்கு கீழ் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

ஆவாரம்பாளையத்திற்கு அருகில் உள்ள ஷோபா நகரில் (வார்டு எண். 40) அமைந்துள்ள ரயில்வேப் பாலம், அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை உருவாக்கி வருகின்றது. ஒரு நான்கு சக்கர வாகனம் மட்டுமே சென்றுவரும் அளவிற்கு சிறிய பாதை அமைக்கப்பட்டுள்ளதால் தினமும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாரளிக்கின்றனர்.



'ஆவாரம்பாளையம் வழியாக சத்தியமங்கலம் சாலையை எளிதாக அடைவதற்கு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பெரும்பாலும் இந்த சாலைய பயன்படுத்திவருகின்றன. அதுமட்டுமின்றி, சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் இந்த பகுதியில் அதிகம் உள்ளதால் கனரக வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இதனால், இந்த சாலை அடிக்கடி சேதமடைகிறது. தொடர்ச்சியாக வாகனங்கள் சென்றுகொண்டே இருப்பதால் சாலையை ஒட்டி இருக்கும் வீடுகள் புழுதி படிந்து காட்சியளிக்கின்றன. இந்த சாலையில் உள்ள ரயில்வேப் பாலத்தை விரைவாக கடப்பதற்கு வாகனகங்கள் முண்டியடித்துபோக முயற்சிப்பதால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டுநர்களுக்குள் சண்டை வருவதால் தினமும் இந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்', என்று கூறினார் ரயில்வேப் பாலத்திற்கு அருகில் வசிக்கும் திரு. K.மதுரேசன்.



ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள இட்டேரி சாலையில் (வார்டு எண். 61) அமைக்கப்படுள்ள ரயில்வேப் பாலம், இரண்டு வாகனங்கள் சென்று வருவதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த வாரம் பெய்த மழையால் பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கி ஒரு வழிச் சாலையாக மாறியுள்ளது.



'பட்டினம் இட்டேரி சாலையில் இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்தி ரயில்வேப் பாலத்தை கடந்து சென்றே ஒண்டிபுதூர் சாலையை அடைகின்றன. இந்நிலையில், ரயில்வேப் பாலத்தில் மழைநீர் தேங்கி ஒரு வழிச் சாலையாக மாறியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது. மேலும், வாகன விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, பொதுப்பணித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என கேட்டுக்கொண்டார் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் திரு. ராஜா.

இவை மட்டுமின்றி கோவை மாநகரில் உள்ள பிரதான ரயில்வேப் பாலங்களின் கீழ் பகுதியில் உள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் இந்த சாலைகளைப் பயன்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. மழை நாட்களில், பாலங்களின் கீழ் பகுதியில், மழைநீர் தேங்குவதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

Newsletter

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...