வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் நேற்று (அக்.,18) நள்ளிரவு 6 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை கதவு மற்றும் சுவற்றை உடைத்து பொருட்களை நாசம் செய்தது.

அருகாமையில் உள்ள மளிகை கடை மற்றும் தேவாலயத்தின் கதவுகள் மற்றும் சுவற்றையும் உடைத்து, நாற்காலி ஆகிய பொருட்களை நாசம் செய்தது. இதனைக் கண்டு பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீ பந்தம் ஏற்றியும், கூச்சலிட்டும் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். இதனைத் தொடர்ந்து, யானைகள் அருகே உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன .. குடியிருப்பு பகுதிக்கு வெகு அருகிலேயே யானைகள் இருப்பதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதேபோல, வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட நடுமலை எஸ்டேட்டில் உள்ள களஅதிகாரி எபி என்பவரின் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அருகில் உள்ள எஸ்டேட் மஸ்டர் கதவு மற்றும் சுவற்றையும் உடைத்தும், முடித்திருத்தகத்தையும் சேதப்படுத்தியது. தொடர்ந்து வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் முத்துமுடி எஸ்டேட், முருகாளி, பெரியகல்லார், நடுமலை, அணலி, பச்சமலை ஆகிய எஸ்டேட்டுகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கும்கி யானையை கொண்டு காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.