கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் டெங்கு கொசு காரணியான ஏடிஸ் கொசுவின் வளரிடங்களை அப்புறப்படுத்தி தூய்மைபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் முழுவதிலும் டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் பணிகள் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களால் தீவிர கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ..
மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவும் அன்றாடம் பல்வேறு ஊராட்சிகளுக்குச் சென்று துப்புறவு சுகாதாரப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல், அப்பகுதிகளிலுள்ள மக்களிடையே மழைக் காலங்களில் நமது சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியம் குறித்தும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஏடிஸ் கொசுப்புழுக்கள் நமது வீடுகளில் உற்பத்தியாகாமல் தடுப்பு முறைகள் செயல் விளக்கம் அளித்தல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், குடியிறுப்போர் சங்கத்தின் மூலம் விழப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட அறிவுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இச்சிறப்பு பணிகள் மூலம் கோவை மாவட்டத்தில் பெருமளவில் பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்று தங்களது குடியிருப்பு
பகுதிகளில் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உறுவாகாத வகையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் வீட்டு மாடிகளில் டெங்கு கொசு வளர்வதற்கு ஏற்ற பகுதிகளாக கண்டறியப்படும் பகுதிகளில் கொசுவலையின் மூலம் மூடும் பணி நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர்கள் (ஊராட்சி) பத்மாவதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி ஆகியோர் இருந்தனர்.