கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து எந்தவித நேரடி சர்வதேச விமான சேவைகளும் இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வந்தது. மேலும், வெளிநாடுகளுக்கு செல்வோர் இணைப்பு விமானத்தை பயன்படுத்துவதற்காக டெல்லி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வர்த்தகம் செழித்த கொங்கு மண்டலத்தில் இருந்து சர்வதேச விமானசேவை வழங்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முதற்கட்டமாக, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானசேவை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் வனிதா மோகன், கோவை, திருப்பூர், கரூர், நீலகிரி, கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகள் பயன்பெறும் என்றார்.
நவம்பர் 18-ம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் இந்த சேவையை வழங்குகிறது. இந்த அறிவிப்பு கொங்கு மண்டலத்தை சேர்ந்த மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விமானசேவை நேரம் :

- விமான எண் 165 : டெல்லியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும். இரவு 10.00 மணிக்கு கோவை வந்தடையும்.
- விமான எண் 166 : கோவையில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்படும். மாலை 05.05 மணிக்கு டெல்லி சென்றடையும்.