தேசிய மகளிர் ஆணைக்குழு மற்றும் சங்கரா கல்லூரி பெண்கள் மேம்பாட்டுச் சங்கமும் இணைந்து தேசிய அளவிலான பெண்களுக்கான சட்ட உரிமைகளைப் பற்றிய போட்டிகள் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டிக்கான வினாத்தாளை வழக்கறிஞர் கோகிலா சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்னர் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டிக்கு சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற் இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் பெண்கள் மேம்பாட்டுநலச்சங்கத் தலைவி திருச்செல்வி முன்னிலை வகித்தார். இதில், பெண்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும் போட்டிகளுக்கான வினாத்தலைப்புகளும் வழங்கப்பட்டன.

வரதட்சணக்கொடுமை, பாலியல்வன்முறை, ஊதியச்சட்டம், பெண்கள்தற்காப்பு முறைகள், மகப்பேறுகால உதவிகள் உள்ளிட்ட பல தலைப்புக்களுக்கான விளக்கங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு அளிக்கப்பட்ட பின்னரே போட்டி தொடங்கப்பட்டது.
இப்போட்டியில், சங்கரா கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு நலச்சங்க உறுப்பினர்களான ரம்யா, தீபா, மகாலட்சுமி, சுவர்ணா ரேணுகாதேவி, மணிமேகலை மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.