கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் இன்று (அக்டோபர் 12) சுபேர் (33) என்பவரை கைது செய்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி மதுரசேகரன் சுபேரை வரும் அக்டோபர் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சதாம் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான முபாரக் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.