நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழ்நாட்டில் உள்ளாட்சிப் பகுதிகளில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளால் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கூட்ட அரங்கில் இன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.