கோவை மாவட்டத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களும் உள்ளடங்குவர்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 40 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களுக்கு தனிவார்டு ஒதுக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 223 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாக அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.