இந்துத்துவாவிற்கு எதிராக உள்ளதால்தான் கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு முடக்குகிறது- சிபிஎம் மாநில செயலாளர் பேட்டி

பழங்கால தமிழகத்தில் சாதி, மதம் இல்லை என்பதை கீழடி ஆராய்ச்சி வெளிப்படுத்துவதாகவும், இந்துத்துவாவிற்கு எதிராக இது இருப்பதாலேயே அகழ்வாராய்ச்சியை கைவிட மத்திய அரசு முயல்வதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரம் சிபிஎம் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

கீழடி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில், அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியை கைவிடும் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. கீழடி அகழ்வாராய்ச்சி இந்துத்துவாவின் வரலாற்று பார்வைக்கு நேர்மாறாக இருக்கின்றது.

பழங்காலத்தில் சாதிகள் இல்லை என்பது கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்துத்துவாவின் பார்வைக்கு மாறான தகவல்கள் வெளியாவதன் காரணமாகவே பாஜக கீழடி அகழ்வாராய்ச்சியை கைவிடுகின்றது. அகழ்வாராய்ச்சியை மூடுவது என்ற மோசமான முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

கோவை மாநகராட்சியின் பொதுமக்களை பாதிக்கும் வகையிலான வரி வசூலை கைவிட வேண்டும். கோவையில் லாபகரமாக இயங்கும் மத்திய அரசின் அச்சகம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தில்லியில் சிபிஎம் கட்சி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவது என்பது சரியல்ல. 40 மாத கால ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்பவே பாஜக முயல்கின்றது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 85 பேர் வரை உயிரிழந்து இருப்பதோடு, ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் முறையாக இல்லாதது டெங்கு பரவும் காரணங்களின் ஒன்று. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். கேரளாவை போல தமிழகத்திலும் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...