உயர்த்தப்பட்ட குடிநீர் வைப்புத் தொகை மற்றும் குப்பை வரி உள்ளிட்ட வரி உயர்வினை திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட குடிநீர் வைப்புத் தொகை, குப்பைவரி உள்ளிட்டவற்றை திரும்பப் பெற வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கூறியதாவது:-
மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வைப்புத் தொகை அதிகரிப்பு மற்றும் குப்பை வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இதனை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
மேலும், வரும் நவம்பர் 3-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாaட்டம் நடைபெறும்.
மாநகராட்சி நிர்வாகம் வரி குறைப்புக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சி மாநில தலைவர்களுடன் கலந்தாலோசித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு திமுக சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.