கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே உள்ள செல்வ சிந்தாமணி ஏரியை தூய்மையாக்க வலியுறுத்தி இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் சார்பில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தும் பணி தொடங்கியது.

செல்வபுரம் பகுதியில் வனப்பாதுகாப்பு, நீர்ப்பாசனம், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்தல், தூய்மை, கழிப்பறைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுவர்களில் ஓவியம் வரைந்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தும் பணியில் ஏராளமான சுற்றுச்சூழல் இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் சஞ்சய் பிரசாத் பேசுகையில், எங்களது இந்த முயற்சியின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும். நாம் வசிக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். காலியாக இருக்கும் சுவர்களில் தூய்மை குறித்து வாசகங்கள் மற்றும் படங்களை வரைவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.