பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரியில் இணைக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 4500-க்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன.
காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுதல், பெட்ரோல், டீசல் எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரியில் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாட்கள் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக லாரிகள் வேலை நிறுத்தத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 4500-க்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வேலைநிறுத்தத்தில் 65 சதவிகித லாரிகள் பங்கேற்றுள்ளதாகவும், இயந்திர உதிரி பாகங்கள், உற்பத்தி பொருட்கள், முட்டை உள்ளிட்ட பொருட்கள் கோவை மாவட்டத்தில் தேக்கமடைந்து இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.