கடந்த சில நாட்களாக கோவை மருதமலை அருகே உள்ள வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்திரா நகர் பகுதியில் காட்டு யானைகள் மீண்டும் உலா வந்தன. யானைகளின் வருகையை அறிந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. பின்னர், நீண்ட நேரத்திற்கு பிறகு, பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு பின்புறம் உள்ள வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானைகள், எந்தசேதமும் ஏற்படுத்தவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.