திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுக் கழிப்பிட வசதியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், நூறு வார்டுகளிலும் 100 சதவீத திறந்த வெளி மலம் கழிப்பதை தடுப்பதற்காக துண்டுபிரசுங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதன் பலனாக, பொதுமக்கள் மாநகராட்சியால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில, காமராஜபுரம், லைட் ஹவுஸ் சாலை, சுப்ரமணிய சாலை, குனியமுத்தூர், சுந்தராபுரம், குறிச்சி, கோவைபுதூர், குனியமுத்தூர், சொக்கம்புதூர், செட்டிவீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் திறந்த வெளியில் மக்கள் மலம் கழிக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு ரூ.600 அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், நகரில் பொதுக் கழிவறை வசதிகள் இல்லாத மக்கள் அந்தந்த வார்டு அதிகாரிகளை அணுகி, பொதுக்கழிப்பறை செய்து தரக் கோரி மனு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.