நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சில மாநிலங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சினான் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் நீண்ட தூர இருசக்கர வாகன பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய அவர், அண்டை நாடுகளான பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் என மொத்தம் 16,000 கி.மீ தூரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

கடந்த ஜுலை 30-ம் தேதி தொடங்கிய இந்த வாகனப் பிரச்சாரமானது, செப்டம்பர் 20-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளின் அத்தியாவசிய தேவையை வலியுறுத்தி வாகனப் பிரச்சாரத்தை மேற்கொண்ட சினான் கோவைக்கு வந்தார். அவருக்கு ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மலர்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இவரது பயணம் குறித்து, கோவை மாற்றுத்திறனாளி அமைப்பினை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இவரது இந்த நீண்ட தூர வாகனப் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாநில மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு உதவியது. மாற்றுத் திறனாளிகளினாலும் எந்த இடையூறுமின்றி வாகனம் ஓட்ட முடியும் என்பதை, சினான் நிரூபித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.