உடலை பலப்படுத்துவதற்காக, உயிரைப் பாதுகாக்க தவறும் நடைபயிற்சி செய்யும் மக்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மலைமாவட்டமான நீலகிரிக்கு மேட்டுப்பாளையத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோத்தகிரி மற்றும் பர்லியாறு வழியாக என இரு சாலைகளில் உதகை செல்ல முடியும். இந்த இரு சாலைகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

மலைப்பகுதி என்பதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் மிகுந்து காணப்படும். குறிப்பாக மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் அடிக்கடி யானை, புலி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் சாலையில் உலா வருகின்றன. இதனால், அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில், மிருகங்கள் நடமாடும் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி வனப்பகுதிகளில் உயிரைப் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால், மக்களை வனவிலங்குகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் சோதனை சாவடியில் இருந்து 5 கி.மீ தொலைவிற்கு பொதுமக்கள் நடந்து செல்ல மேட்டுப்பாளையம் செசன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி செய்வது ஆபத்தானது என்பதை மக்கள் உணர்வதில்லை. அவ்வாறு தடையை மீறுபவர்களை கண்டிக்கவோ, எச்சரிக்கை விடுக்கவோ வனத்துறை அதிகாரிகள் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரை, வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் வனப்பகுதிக்குள் செல்லும் மக்களோ அல்லது விலங்குகளுக்கோ எந்த உயிர்சேதம் ஏற்படவில்லை. ஆனால், இதே நிலை தொடரும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

உயிரை பாதுகாத்துக் கொள்ள மறந்துவிட்டு, உடலை பலப்படுத்தும் மக்களிடையே, வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...