கோவை மாநகராட்சியின் புதிய வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் திமுக-வினர் மனு

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை மற்றும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிச்சி பிரபாகரன் தலைமையில் குறிச்சி பகுதி திமுக-வினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து குறிச்சி பிரபாகரன் கூறியதாவது:-

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகிறது.

கோவை மாநகரத்தில் தரமான தார் சாலைகளும், வடிகாள்களும் அமைக்கப்படாத நிலையில் வரியினை மட்டும் உயர்த்தி பொதுமக்களை வாட்டும் வகையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் எஸ்.பி.வேலுமணியின் பினாமி ஆட்களால் மேற்கொள்ளப்படுவதால் மாவட்ட நிர்வாகமும் இதன் மீது கவணம் செலுத்துவதில்லை.

குறிப்பாக, மாநகராட்சி ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கமுடியாத நிலையில் நிதி நிலைமை மோசமாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழக அரசும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு குறிச்சி பிரபாகரன் தெரிவித்தார்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...