அப்போலோவில் செப்.,22 இரவு நடந்தது என்ன..? ஜெயலலிதாவின் உடல்நிலை அறிக்கை வெளியீடு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்படும் நிலையில், அது குறித்து விசாரணை செய்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, அதாவது நோயாளியின் உடல்நிலை அறிக்கை புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது. 

சென்ற ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு, ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இரவு 10 மணிக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அந்த உரையாடலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது உடனே வருமாறு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 10.01-க்கு அப்போலோவில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ், மணி 10.06-க்கு போயஸ் கார்டன் சென்றடைந்தது. ஆம்புலன்ஸில் இருந்து விரைந்து சென்ற 3 பேர் கொண்ட மருத்துவக்குழு, போயஸ் தோட்ட இல்லத்தின் முதல் தளத்திற்கு சென்றது.

அங்கு மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்த முதலமைச்சரை தட்டி எழுப்ப முயற்சித்துள்ளனர். அசைவு மட்டுமே இருந்ததும், முதலமைச்சரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்பது அந்த தொலைக்காட்சிக்கு கிடைத்த ஆதாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார். சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தமானது 140/70ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, நிமிடத்திற்கு சராசரியாக 72 என இருக்க வேண்டிய இதயத்துடிப்பானது 80 ஆக அதிகரித்திருக்கிறது. சர்க்கரை அளவானதும் கடுமையா உயர்ந்திருக்கிறது. சராசரி மனிதனுக்கு 120 எம்ஜி இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவானது ஜெயலலிதாவுக்கு 508 எம்ஜி என்ற அபாய நிலையில் இருந்ததும் அந்த உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே, ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் உடலில் 100 சதவீதம் இருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவு 45 சதவீதம் என்ற அபாய நிலையிலேயே இருந்துள்ளது. 

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று இரவில் அவரது இல்லத்தில் நடந்தவை என பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், ஜெயலலிதா உடலில் காயமோ, புண்களோ இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சர்க்கரை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், தைராய்டு, நிமோனியா காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் இருந்ததாக மருத்துவ உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...