அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது எனக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் காவல் ஆணையரிடம் மனு

மதச்சார்பின்மையை உறுதி செய்யும் விதமாக அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடக்கூடாது என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். 

இது குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் புறநகர மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நமது நாடு மதச்சார்பற்றது என்று நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புறையே கூறுகிறது. மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை, பொதுத்துறை வளாகங்களில் மத விழாக்களும், பூஜைகளும் சமீபகாலமாக அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முந்தைய காலகட்டங்களில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இது போன்ற மத விழாக்கள் கொண்டாடக்கூடாது என்று உத்தரவிட்டபோதும் தொடர்ந்து மத விழாக்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மத வழிபாடுகள் நடத்தக் கூடாது. உங்கள் துறை அலுவலகங்களில் இது போன்ற மத வழிபாடுகளை கடைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.



இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...