கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) நடைபெற்றது. 

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2017-18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.

இதில் மன்றத்தின் தலைவராக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் சுப்புராஜ், தினமணி புகைப்படக் கலைஞர் பேச்சிக்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஈநாடு டிஜிட்டல் செய்தியாளர் சீனிவாசன் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், நியூஸ் எக்ஸ் செய்தியாளர் சுதாகர், தினகரன் புகைப்படக் கலைஞர் கார்த்தீஸ்வரன் துணை செயலாளர்களாகவும், மன்றத்தின் பொருளாளராக தீக்கதிர் செய்தியாளர் அ.ர.பாபு தேர்வு செய்யப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக சன் டிவி செய்தியாளர் மார்ட்டின் ராஜா, தினகரன் செய்தியாளர் சந்துரு, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் கோமல், தீக்கதிர் செய்தியாளர் ஜீவானந்தம், நியூஸ் 7 செய்தியாளர் ஷெர்லி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...