ஸ்டார்ட்அப் திட்டத்தின் மூலம் மாணவர்களின் புதிய முயற்சியை ஊக்குவிக்கும் ஃபோர்ஜ் நிறுவனம்

தொழில் மேம்பாட்டு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ), தமிழ்நாடு அரசு மற்றும் ஃபோர்ஜ் நிறுவனம் இணைந்து ஸ்டார்ட்அப் என்ற திட்டத்தின் மூலம் மாணவர்கள் முயற்சியில் உருவாகும் புதிய தொழில் திறனை செயல்படுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் மற்றும் நிதியளிப்பதற்கும் 5 ஆண்டுகால திட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்நிறுவனங்கள் கையெழுத்திட்டன. இந்த திட்டத்தின் மூலம் மாநில அளவில் கல்லூரி மாணவர்கள் ஒரு புதுமையான தயாரிப்புகள் மற்றும் வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்குவதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தும், அதனை வளர்ப்பதற்கும் நிதியளிப்பதற்கும் இத்திட்டம் இலக்காக உள்ளது.

இதன் மூலம் கோவை சரவணம்பட்டி கே.சி.டி டெக் பார்க்கில் உள்ள ஃபோர்ஜ் நிறுவனம் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் மேம்பாட்டிற்காக 21 முதல் 23ம் தேதி வரை மூன்று நாள் பயிற்சி பட்டறை நடத்துகிறது. இதில் விண்ணபித்த கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த தொழிற் பயிற்சிக்கு முன்னோக்கி எடுத்து செல்கிறது. முதல் இரண்டு நாட்களில் மாணவர்கள் முயற்சியில் உருவான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அதனோடு ஃபோர்ஜ் நிறுவனத்தின் திறமை மிகுந்த பயிற்சியாளர்களைக் கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சியும் வழங்குகிறது. 



இந்த மூன்று நாட்களில் நடைபெறும் இந்த பயிற்சி பட்டறையில் இறுதி கட்டமாக மாணவர்களின் ஒவ்வொரு குழுவின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகையான திட்டத்தை எங்கள் நிறுவனத்தின் முன்அனுபவம் உள்ள பயிற்சியாளர்கள் மத்தியில் 10 அல்லது 12 குழுக்களை தேர்ந்தெடுக்கும். அவர்கள் வரும் டிசம்பர் மாதம் இறுதி போட்டியில் பங்குபெற்று அதில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய திட்டத்தில் உருவான முயற்சி தமிழ்நாடு அரசு தொழில் மேம்பட்டு நிறுவனம் மற்றும் ஃபோர்ஜ் நிறுவனத்தால் ஊக்குவிக்கப்படும்.



தமிழ்நாடு அரசு தொழில் மேம்பட்டு நிறுவனம் சார்பில் 5 ஆண்டு திட்டமாக தமிழ்நாடு அளவில் தொடங்கப்பட்ட மாணவர்களுக்கான தொழில் மேம்பாட்டு திட்டம் தமிழ்நாட்டில் ஃபோர்ஜ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட முதல் தொழில் மேம்பாட்டு திட்டதில் 45 குழுக்களில் 3 குழுக்களுக்கு கூட்டுறவுக்கான வழிவகுக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 21, 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் 40 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், அக்டோபர் 12-14ம் தேதி மற்றும் 29-31ம் தேதியில் இது போன்று 40 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் இறுதி போட்டியில் தேந்தெடுக்கப்படும் முதல் 10 குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 6 குழுக்களுக்கு தமிழ்நாடு அரசு தொழில் மேம்பட்டு நிறுவனம் மற்றும் ஃபோர்ஜ் நிறுவனம் சார்பில் தொழில் மேம்பாட்டிற்கான கூட்டுறவு வழங்கப்படும்.



இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவர் மரிய கிளின்டன் இது குறித்து கூறுகையில், ஸ்ரீபெரம்புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு பள்ளி படிக்கும் காலம் முதலிலே தமிழ்நாட்டில் கடலில் மீன்பிடி தொழில் செய்வோரின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதனை குறித்து ஆய்வு செய்து வந்தேன். 

தற்போது இலங்கை மீனவர்களால் தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்களுக்கு ஏற்படும் தொடர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது அவர்கள் எல்லையை தாண்டும் பட்சத்தில் அலாரம் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், மற்ற மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கம்யூனிகேஷன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை காப்பாற்றுவது போன்றவற்றை தொழில்நுட்பம் மூலமாக கொண்டுவர முடியும். இது போன்ற மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு தொழில் மேம்பட்டு நிறுவனம் மற்றும் ஃபோர்ஜ் நிறுவனம் இணைந்து எங்களுக்கு மூன்று நாள் பயிற்சி பட்டறையினை வழங்கி வருகிறது.



இந்த பயிற்சி பட்டறையின் முதல் நாளில் மாணவர்களை ஊக்குவித்து பேசியும், மாணவர்களின் புதிய திறமைகளை முந்தைய முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காணிப்பாளர்களைக் கொண்டும் மேலும், அறிவுத் திறனையும் வளர்த்து வந்தது. இறுதி நாளில் எங்களின் கண்டுபிடிப்புகளின் தீர்வுகள் சீரமைக்கப்பட்டு தேர்வு செய்தனர். இந்நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 15 முகாமினை நடத்தி 45 பேரை தேர்வு செய்துள்ளது. இந்த ஆண்டிற்குள் 100 பேரை தேர்வு செய்து அவர்களின் தொழில் மேம்பாட்டை உறுதி செய்ய உள்ளது என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...