பயணிகளை அச்சுறுத்தும் குண்டும் குழியுமான கோவை சாலைகள்..!

கோவையில் அவ்வப்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினைத் தொடர்ந்து சாலையில் வாகனங்களை ஓட்டுவது ஒரு கெட்டக் கனவாக மாறிவருகிறது. மேலும், கோவையின் முக்கிய சாலைகள் அனைத்தும் பயன்படுத்தவே முற்றிலும் தகுதியற்றதாக உள்ளது. 

அவ்வாறாக கோவையில் பழுதான சாலைகள் குறித்து கண்டறிய நமது சிம்ப்ளிசிட்டி நிரூபர்கள் மேற்கொண்ட ஆய்வில், கோவையின் பிரதான சாலைகள் அனைத்துமே இந்த பருவ மழைக்கு பழுதாகியுள்ளது தெரியவந்துள்ளது. 



தார் சாலையின் மேற்பரப்பில் ஊற்றப்படும் இராசாயனக் கழிவுகள் சாதாரண மழைக்கே அடித்துச்செல்லும் பட்சத்தில் சாலையில் குழிகள் ஏற்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுவதும், விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.



காந்திபுரம், டாக்டர். நஞ்சப்பா சாலை, ராஜ வீதி, கணபதி மற்றும் துடியலூர், ஈச்சனாரி உள்ளிட்ட கோவைக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் அனைத்துமே தற்போது பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.



இந்த சாலைகளைப் பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், காயமடைவதும் வழக்கமாகிவிட்டது என்கிறார் அன்றாடம் காந்திபுரம் வழியாக அலுவலகம் செல்லும் ரமேஷ்.



மேலும், கோவை மாநகராட்சியும், தேசிய நெடுஞ்சாலைத்துறையும் சிதலமடைந்துள்ள சாலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது. இதனால் வேறு வழியின்றி பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவ்வாறான சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.



இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையினைத் தொடர்ந்து வடகிழக்கு பருவ மழையும் விரைவில் பெய்யக்கூடும். இதனிடையே, கோவை மாநகரத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்றார்.

கோவையில் நாளுக்கு நாள் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான ஆபத்துகள் நிறைந்த சாலையினை தொடர்புடைய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

போக்குவரத்து ஆய்வுத் துறையின் கணக்கெடுப்பின் படி, வருடத்திற்கு 12,250 உயிரிழப்புகள் குண்டும், குழியுமான சாலையில் ஏற்படுகிறது என்கிறது.

மேலும், இந்திய அளவில் ஒப்பிடுகையில் தமிழகம் விபத்துகளில் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 14.9 சதவிகிதம் விபத்துகள் தமிழகத்தில் ஏற்படுகிறது என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற தரமற்ற சாலையினால் ஏற்பட்ட விபத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முறையான சாலைகளை அமைக்க வேண்டும். பருவ மழைக் காலங்களில் சாலைகளின் தரத்தினை அறிந்து முன்கூட்டியே அதனை சீரமைக்க வேண்டும் என்பதனையே இந்த சம்பவங்கள் அனைத்தும் உணர்த்துகின்றன.



கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி நிர்வாகத்துடனும், தேசிய நெடுஞ்சாலைத் துறையினருடனும் அவசர ஆலோசனைக் கூடடத்தினை மேற்கொண்டு கோவையில் சிதிலமடைந்துள்ள சாலைகளை உடனடியான சீரமைக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாகும்.



















Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...