முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசால் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், உதகையில் 09.10.2017 (திங்கட்கிழமை) அன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 09.10.2017 அன்று நடைபெறவிருந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, நிர்வாக காரணங்களினால் 07.12.2017 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.