மாநகராட்சியின் பல்வேறு வரி உயர்வைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


கோவை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் வீடுகளுக்கு வரி மறு சீராய்வு, குடிநீர் வைப்புத் தொகை உயர்வு, குப்பைக்கு வரி விதிப்பு உள்ளிட்ட புதிய வரிகளையும், வரி உயர்வினையும் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது கோவை மாநகரத்தில் உள்ள அணைத்து வீடுகளையும் மறு அளவீடு செய்து 13.5 ஆண்டுகளுக்கான வரி விதிப்பு செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும். குடிநீருக்கான வைப்பத் தொகையை ரூ.2 ஆயிரம் முதல் 7500 வரை உயத்தியுள்ளதை திரும்பப் பெற வேண்டும். மேலும், வீடுகளில் குப்பைகளுக்கு ரூ.20 முதல் 200 வரை வரிவிதிக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட மாமன்றம் இல்லாத நிலையில் மக்கள் பிரநிதிகள் மற்றும் மக்களிடம் ஏதும் கருத்துக்களை கேட்காமல் மாநகராட்சி அதிகாரிகளே வரிகளை உயர்த்தியதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.



முன்னதாக மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டன உரையாற்றினார். கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி உள்ளிட்டு 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...